தமிழ், ஆங்கில எழுத்துகளை சரியாக உச்சரிக்கவில்லை எனக் கூறி யூகேஜி மாணவனை கடுமையாக அடித்த தனியார் பள்ளி ஆசிரியர்கள்
சென்னை அருகே தமிழ், ஆங்கில எழுத்துகளை சரியாகப் படிக்கவில்லை எனக் கூறி யூகேஜி படிக்கும் சிறுவன் ஒருவனை கடுமையாக அடித்ததாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரவள்ளூர் ஜி.கே.எம்.காலனியைச் சேர்ந்த அந்தச் சிறுவன் அங்குள்ள டான் போஸ்கோ பள்ளியில் யூகேஜி படித்து வருகிறான். எல்.கே.ஜி வகுப்புகளை ஆன்லைனில் படித்துவிட்டு, யூகேஜி வகுப்புகளுக்காக நேரடியாகப் பள்ளிக்கு வந்த மாணவனால், ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துகளை சரியாக உச்சரிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து பிரின்சி, இன்டியனாவான், மோனோ பெராரா என 3 ஆசிரியர்கள் அவனை கடுமையாகத் திட்டி அடித்தனர் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்த்த நிலையில், பயத்தில் மாணவன் அழுகையை நிறுத்தவில்லை.
சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் 3 ஆசிரியர்களையும் போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
Comments