ரஷ்ய கப்பல்கள் துறைமுகங்களுக்கு வர இத்தாலி அரசு விதித்த தடை அமலானது.!

0 2402

ரஷ்ய கப்பல்கள் தங்கள் துறைமுகங்களுக்குள் வர இத்தாலி அரசு விதித்த தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏற்கனவே துறைமுகங்களில் உள்ள ரஷ்ய கப்பல்கள் உடனடியாக புறப்பட்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், தங்கள் நாட்டில் கருங்கடலில் உள்ள துறைமுகங்களுக்கு ரஷ்யாவில் பதிவு செய்த அனைத்து கப்பல்களும் வரக்கூடாது என பல்கேரியா அரசு அறிவித்துள்ளது.

மனிதாபிமான உதவியை நாடும் கப்பல்கள் அல்லது எரிசக்தி பொருட்கள், உணவு மற்றும் மருந்துகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கொண்டு செல்லும் கப்பல்களுக்கு மட்டுமே இந்த தடையில் விலக்கு அளிக்கப்படுவதாகவும் பல்கேரியா குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 50ஆவது நாளை கடந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான இத்தாலி, பல்கேரியா உள்ளிட்டவை ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments