கும்பகோணத்தில் வீடு புகுந்து ஒருவரை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற ஒரு இளஞ்சிறார் உட்பட 3 பேர் கைது.!

0 2880

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 7-ஆம் தேதி வீடு புகுந்து  ஒருவரை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற ஒரு இளஞ்சிறார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாபநாசம் அடுத்துள்ள நெடுந்தெருவில் வசித்து வந்த 63 வயது அப்துல் ரஜாக் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரை கொன்று பீரோக்களை உடைத்து 20 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மோப்ப நாய் மற்றும் சிசிடிவி பதிவுகளின் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், வடக்குமாங்குடி ஆற்றங்கரையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பதுங்கி இருந்த விஸ்வா, பாட்ஷா என்கிற ராஜசெல்வம் மற்றும் ஒரு சிறுவனை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 5 சவரன் நகை, 24 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments