ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு உலகளாவிய தடை விதிக்குமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்.!

ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு உலகளாவிய தடை விதிக்குமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
உக்ரைன் மீதான போர் 50 நாட்களை கடந்து நீடித்து வரும் நிலையில், கூடுதல் ஆயுதங்களை மேற்குலக நாடுகள் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா கைப்பற்றியுள்ள நகரங்களில் வசிக்கும் மக்களை ரஷ்ய படைகள் கடுமையாக அச்சுறுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ள ஜெலன்ஸ்கி, ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு உலகளாவிய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
போரில் வீடுகளை இழந்து, உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்துள்ள உக்ரைன் மக்களுக்கு தற்காலிக வீடுகளை வழங்குவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி அளித்துள்ளார்.
Comments