கோவையில் முள்கம்பி வேலியில் சிக்கிக்கொண்ட புள்ளி மானை நாய்கள் கடித்துக்குதறிய நிலையில் அந்த மானை வெட்டிக்கூறு போட்ட 6 பேர் கைது.!

0 2135

கோவையில் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்திற்குபட்ட பகுதியில் முள்கம்பி வேலியில் சிக்கிக்கொண்ட புள்ளி மானை நாய்கள் கடித்துக்குதறிய நிலையில் அந்த மானை வெட்டிக்கூறு போட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனைக்கட்டி ஜம்புகண்டி வனப் பகுதியில் ஒரு புள்ளிமானை நாய்கள் துரத்திச்சென்ற நிலையில் அந்த மான் அங்குள்ள பட்டா நிலத்தில் போடப்பட்டிருந்த முள் கம்பி வேலியில் சிக்கிக்கொண்டது.

பின்னர் அந்த மானை நாய்கள் கடித்துக்குதறிக்கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதியை சேர்ந்த 6 பேர் நாயைகளை துரத்தி விட்டு, மானை எடுத்து வெட்டி கறியாக்கியுள்ளனர்.

ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் வனத்துறையினர் அந்த இடத்திற்கு சென்று மானை கறியாக்கிய முருகன், சாந்தி, சிவகாமி உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்ததுடன், அவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments