இந்தியா - சீனா இடையே நீடிக்கும் எல்லை பிரச்சனை.. எல்லைப்பகுதியில் செல்போன் கோபுரங்கள் அமைத்து வரும் சீனா

0 2273
இந்தியா - சீனா இடையே நீடிக்கும் எல்லை பிரச்சனை.. எல்லைப்பகுதியில் செல்போன் கோபுரங்கள் அமைத்து வரும் சீனா

உடனான எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்கு மிக அருகே சீனா செல்போன் கோபுரங்கள் அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து, இதுவரை இரு நாடுகள் இடையே 15 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையிலும், எல்லைப்பகுதியில் சீனா அவ்வப்போது அத்துமீறி வருகிறது.

சில நாட்களுக்கு முன் பாங்காங் ஏரி பகுதியில் சட்டவிரோதமாக பாலம் கட்டி வந்த சீனா, பாலப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, தற்போது செல்போன் கோபுரங்கள் அமைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்திய எல்லைக்கு மிக அருகே அசல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து கிழக்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூசுல் என்ற பகுதியில் மூன்று செல்போன் கோபுரங்களை சீனா அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments