உக்ரைனின் 8 முக்கிய நகரங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல்.. ரஷ்ய படைகளின் ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றி எரிந்த கட்டிடம்

0 1693
உக்ரைனின் 8 முக்கிய நகரங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல்.. ரஷ்ய படைகளின் ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றி எரிந்த கட்டிடம்

உக்ரைனின் 8 முக்கிய நகரங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கார்கிவ், மைக்கோலைவ், கெர்சன், டொனெட்ஸ்க் உள்ளிட்ட 8 நகரங்களில் ரஷ்ய படைகள் வான்வழி மற்றும் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், லிசிசான்ஸ்க் நகரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பற்றி எரிந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கார்கீவ் நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி கிடந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கருங்கடல் பகுதியில் இருந்த ரஷ்ய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததையடுத்து, ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

குறிப்பாக, கிழக்கு உக்ரேனிய நகரமான கார்கிவில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், 18 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments