பிரதமர் மோடி நாளை முதல் 3 நாள் குஜராத் பயணம்.. பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

பிரதமர் மோடி நாளை முதல் 3 நாள் குஜராத் பயணம்.. பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
பிரதமர் மோடி நாளை முதல் 3 நாட்களுக்கு குஜராத் பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். நாளை காந்தி நகரில் பள்ளிகள் டேட்டா கட்டுப்பாடு வளாகத்துக்கு மோடி செல்ல உள்ளார்.
நாளை மறுநாள் பனஸ் பால்பண்ணை சங்குலில் நாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அவர் அர்ப்பணிக்க உள்ளார். சில புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.
அதே நாளில் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய வைத்தியத்துக்கான மையத்தையும் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.20 ஆம் தேதி ஆயுஷ் முதலீட்டாளர் மற்றும் ஆய்வாளர் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
தொடர்ந்து தாஹோத் பகுதியில் 22 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
Comments