இரும்புக் கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய மத்திய அமைச்சர்

0 2444
இரும்புக் கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய மத்திய அமைச்சர்

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இரும்புக் கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நூலிழையில் உயிர் தப்பினார்.

ஆக்ராவின் நாக்லா பத்மா பகுதியில் நடைபெற்ற அம்பேத்கர் ஜெயந்தி நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வால் பங்கேற்றார். அவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென பலத்த காற்று வீசியதை அடுத்து, அருகே அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பம் சரிந்து மேடையில் விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில், மேடையில் அமர்ந்திருந்த ஒருவர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேடையில் அமர்ந்திருவர்களுக்கு அருகே இரும்பு கம்பம் விழுந்ததால், உரையாற்றிக் கொண்டிருந்த மத்திய அமைச்சர் உயிர்தப்பியதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments