தலைமுடியை பிடித்து தர தரவென இழுத்து காதலுக்கு கண்ணீர் அஞ்சலி..! காதலன் திருமணத்தில் காதலிக்கு அடி உதை..!

0 8850
தலைமுடியை பிடித்து தர தரவென இழுத்து காதலுக்கு கண்ணீர் அஞ்சலி..! காதலன் திருமணத்தில் காதலிக்கு அடி உதை..!

7 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறி ஒன்றாக ஊர் சுற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த காதலனின் திருமணத்தை நிறுத்த போராடிய காதலியை , தலைமுடியை பிடித்து இழுத்து வந்து, காதலனின் உறவுப்பெண்கள் அடித்து உதைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

தமிழ் திரைப்படம் ஒன்றின் கிளைமேக்ஸ் காட்சியில் காதலிக்கு மண்டபத்தில் வேறொருவருடன்திருமண ஏற்பாடுகள் நடக்க, வெளியில் காதலன் அடித்து உதைத்து இழுத்துச்செல்லப்படுவார். அவர் பாடி அழைத்ததும் காதலி மாலையை கழற்றி தூக்கிபோட்டுவிட்டு வந்து நாயகனை கரம் பிடிப்பார்..!

இதே போன்ற சம்பவம் ஒன்று தெலங்கானாவில் உல்டாவாக நடந்துள்ளது. கம்பம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஸ்ரீநாத் என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

திருமணத்திற்கு சற்று நேரத்திற்கு முன் அங்கு வந்த , மாப்பிள்ளை ஸ்ரீ நாத்தின் காதலி ரஜினி என்பவர் திடீரென்று திருமண மண்டபத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக தன்னை உருக உருக காதலித்து , ஊர் ஊராக ஒன்றாக சுற்றிய காதலன் ஸ்ரீநாத் இப்போது வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறி சத்தம் போட்டார்.

திருமணத்தை நிறுத்த சதி செய்வதாக கூறி ஆவேசமான மணமகனின் உறவுப் பெண்கள் , ரஜினியின் தலைமுடியையும் கைகளையும் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து வெளியில் தள்ளினர்.

தன்னுடைய அழுகுரல் கேட்டு காதலன் மணவறையில் இருந்து எழுந்து வருவான் என்ற நம்பிக்கையில் காதலி ரஜினி, அந்த பெண்களுடன் வாக்குவாதம் செய்து கத்தி கதறி மல்லுக்கு நிற்க , அவர்கள் பதிலுக்கு ரஜினியை செருப்பால் தாக்கி விரட்டி அடித்தனர்

அதே வேளையில் காதலன் ஸ்ரீநாத்தோ நிச்சயக்கப்பட்ட முகூர்த்தத்தில் மணப்பெண்ணுக்கு தாலி கட்டி தனது மனைவியாக்கிக் கொண்டார் . எந்த ஒரு தடையுமின்றி ஸ்ரீநாத்தின் திருமணம் திட்டமிட்டப்படி நடைபெற்று முடிந்தது.

திருமணத்தை நிறுத்துவதற்காக காதலி ரஜினி கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த காவல்துறையினரோ, மாப்பிள்ளை வீட்டார் வெயிட்டாக கவனித்ததால் கண்ணுக்கு முன்னால் ஒரு காதலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுவதை கண்டும் காணாமல் மவுனமாக இருந்தனர்

அதே நேரத்தில் காதலித்த பெண் உள்ளூர் காரராக இருந்தும், அவருக்கு ஆதரவாக ஒருவர் கூட வராததால், காதலனை தேடி திருமணம் மண்டபம் வரை வந்து.. அங்கு விழுந்த அடிகளோடு ஏமாற்றத்துடன் இலவு காத்த கிளியாக அங்கிருந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார் ..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments