என்ஜினியரை கடத்தி ரூ.1.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல்.. விபத்தை ஏற்படுத்தியதற்காக லாட்ஜில் அடைத்து மிரட்டல்

0 2338
என்ஜினியரை கடத்தி ரூ.1.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல்.. விபத்தை ஏற்படுத்தியதற்காக லாட்ஜில் அடைத்து மிரட்டல்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே, என்ஜினியரை கடத்தி லாட்ஜில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஆல்வின், பெங்களூருவில் உள்ள ஐ.டி. கம்பெனியில் என்ஜீனியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 14ம் தேதி இவர் காரில் திம்மாபுரம் வழியாக நாகர்கோவில் வந்துக் கொண்டிருந்த போது, இவரது கார், முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 2 இளைஞர்கள் காயமடைந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்த சந்தோஷ், அன்பரசன், லோகநாதன் ஆகிய 3 பேர் ஆல்வினிடம் பேசி காவல் நிலையம் செல்ல வேண்டாம், இதை நாமே பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனக் கூறி அவரை ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர், அங்கு அடைத்து வைத்து ஆல்வினின் தந்தையை தொடர்பு கொண்டு ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து ஆல்வினின் தந்தை அளித்த புகாரின் பேரில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments