விண்ணில் தனி விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா.. சீனா அனுப்பிய விண்வெளி வீரர்கள் 3 பேர் பூமிக்கு திரும்பினார்கள்

0 5393
விண்ணில் தனி விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா.. சீனா அனுப்பிய விண்வெளி வீரர்கள் 3 பேர் பூமிக்கு திரும்பினார்கள்

விண்வெளிக்கு சீனா அனுப்பிய விண்வெளி வீரர்கள் 3 பேர், 6 மாதங்களுக்கு பின், பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

வானில், டியான்காங் என்ற தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சீனா, அதற்காக வீரர்களை அனுப்பி கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே 7 முறை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய சீனா, 8வது முறையாக, கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதியன்று, சென்சூ-13 என்ற விண்கலத்தை அனுப்பியது.

வட மேற்கு சீனாவில் உள்ள ஜியாகுவான் செயற்கை கோள் ஏவுதளத்தில் இருந்து சென்ற அந்த விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்கள் சென்றனர்.

வானில் இருந்தபடி, விண்வெளி நிலையப் பணிகளோடு, பூமியில் உள்ளவர்களுடன் அறிவியல் குறித்த கலந்துரையாடல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிசோதனைகள் என ஏராளமான பணிகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.

6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அவர்கள் 3 பேரும், வடக்கு சீனாவின் மங்கோலியப் பகுதியில் தற்போது பத்திரமாக தரை இறங்கி உள்ளனர்.

3 பேரும் 183 நாட்கள் வரை விண்வெளியில் இருந்துள்ளதால், சீனா, இதுவரை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய திட்டங்களில் இதுவே மிக நீண்ட கால திட்டமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments