வீட்டு வாசலில் தூங்கிக்கொண்டிருந்த பள்ளி மாணவனை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் வெட்டி விட்டு தப்பியோட்டம்

0 2671
வீட்டு வாசலில் தூங்கிக்கொண்டிருந்த பள்ளி மாணவனை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் வெட்டி விட்டு தப்பியோட்டம்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பள்ளி மாணவனை, நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகரைச் சேர்ந்த திமுக பிரமுகரான கவியரசன் என்பவரது  மகன் பார்த்தீபன், அப்பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் அவரது வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நள்ளிரவில் முகமூடி அணிந்தபடி வந்த மர்மநபர், பார்த்திபனின் தலை மற்றும் முகத்தில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவிக்கேமராவில் பதிவான நிலையில், படுகாயமடைந்த பார்த்திபன் மீட்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டான்.

தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வரும் போலீசார் மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments