சாலை நடுத்தடுப்பில் மோதி சுற்றுலா வேன் விபத்து ; 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

0 2376
சாலை நடுத்தடுப்பில் மோதி சுற்றுலா வேன் விபத்து ; 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கரூர் வெங்கக்கல்பட்டியில் இருசக்கர வாகனம் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற வேன், சாலை நடுத்தடுப்பில் மோதிக் கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சுமார் இருபது பேர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலுக்கு திருவிழாவிற்காக வேனில் சென்று கொண்டிருந்தனர்.

கரூரை அடுத்த வெங்கக்கல்பட்டி பிரிவு அருகே திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அவர் மீது மோதாமல் இருக்க வேனை ஓட்டுநர் திருப்பிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி விபத்துள்ளானது. இதில், இரு சக்கர வாகனத்தில் சென்றவர், சுற்றுலா வேனில் இருந்தவர்கள் என 15க்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments