ரவுடி பினுவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி.!

0 2234

சென்னை புறநகர் பகுதியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிரபலமடைந்த ரவுடி பினு, டெலிவரி ஊழியரை தாக்கி செல்ஃபோன் பறித்த வழக்கில் போலீசில் சரணடைந்த நிலையில், நெஞ்சுவலி சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

நேற்று தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கறிஞர் மூலம் சரணடைந்த ரவுடி பினுவை போலீசார் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது தனக்கு இதய நோய், சர்க்கரை நோய், நெஞ்சுவலி போன்ற உபாதைகள் இருப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என பினு நீதிபதியிடம் முறையிட்டான்.

ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி கிருஷ்ணன் பினுவுக்கு சிகிச்சைகள் வழங்க உத்தரவிட்டதையடுத்து அவன் ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments