சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் விவகாரம்.. புகார் அளித்தவரை மிரட்டிய கேட்டரிங் உரிமையாளர் கைது.!

0 2129

சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்கக் காரணமாக இருந்த சமூக ஆர்வலரை மிரட்டிக் குறுஞ்சேதி அனுப்பிய கேட்டரிங் உரிமையாளரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நங்கநல்லூரைச் சேர்ந்த மகேஷ் அயோத்தியா மண்டபத்தில் கேட்டரிங் ஆர்டர் பெற்று உணவு வழங்கி வந்ததும், இனித் தனக்கு கேட்டரிங் ஆர்டர் கிடைக்காது என்பதால் மிரட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மகேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments