சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் விமரிசையாக நடைபெற்றது.
பரமக்குடியில் உள்ள சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான இன்று, பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து நீல நிற பட்டுத்தி பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார்.
அங்கு கூடியிருந்த ஏராளாமான பக்தர்கள், இறை முழக்கத்துடன் கள்ளழகரை தரிசித்தனர்.
இதேபோல, தேனி மாவட்டம் போடியில் ஸ்ரீநிவாச பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கொட்டக்குடி ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாளும் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பச்சைப்பட்டு உடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கி அருள்பாளித்தார்.
Comments