பள்ளிக்கூட சண்டியர்களுக்கு பளார்.. பளார்.. என்ன அடி..!

0 2202

பள்ளிக்கூடம் விட்டதும் சண்டையிட்டு கடையில் ரகளை செய்த அடாவடி மாணவர்களை கடைக்காரர் அடித்து ஓடவிட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.

பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்கு செல்லாமல் கூட்டாளிகளுடன் கூடிப்பேசி கும்பலாக மோதிக் கொள்வதை நம்ம ஊரைப் போலவே கேரள பள்ளி மாணவர்களும் வழக்கமாக செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பள்ளிக்கூடம் விட்டு வெளியே வந்த மாணவர்கள் வீதியில் இரு குழுக்களாக மோதிக் கொண்டனர்

மாணவர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டே அருகில் இருந்த கடைக்குள் விழுந்து பொருட்களை தள்ளிவிட்டதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கடைக்காரர் இரு தரப்பு மாணவர்களையும் விரட்டி விரட்டி தாக்கி சிதறவிட்டார்

ஒரு கட்டத்தில் கடைக்காரருக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுனர்களும் களமிறங்கியதால் பள்ளிக்கூட சண்டியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்

வீட்டுக்கும், பள்ளிக்கும் அடங்காதவர்கள் ஊருக்கு அடங்குவார்கள் என்பதற்கு சாட்சியாகி இருக்கிறது இந்த சம்பவம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments