உணவு ஆலையின் சாலட் தயாரிப்பு பிரிவில் திடீர் தீ விபத்து.. 35,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறத் தடை

0 1128
அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உணவு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தால் ரசாயான தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு 35 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உணவு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தால் ரசாயான தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு 35 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆலையின் சாலட் தயாரிப்பு பிரிவில் ஏற்பட்ட தீ மெல்ல நாலாபுறமும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறிய தீயை போராடி வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆலையில் இருந்து வெளியேறிய அமோனியா நச்சு காற்றில் கலந்ததை அடுத்து உடனடியாக ஆலை அருகில் இருந்த 2ஆயிரத்து 700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 35 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என உள்ளூர் அரசு நிர்வாகம் தடை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments