பா.ஜ.க.வை சேர்ந்தவர் ஆட்களை ஏவி தன் மீது தாக்குதல் நடத்தியதாக கடைக்காரர் ஒருவர் புகார்
சென்னை அம்பத்தூரில் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் ஆட்களை ஏவி தன்மீது தாக்குதல் நடத்தியதாக கடைக்காரர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை அம்பத்தூரில் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் ஆட்களை ஏவி தன்மீது தாக்குதல் நடத்தியதாக கடைக்காரர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
திருமங்கலத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் கொரட்டூரில் நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட் அருகே பாஜக-வைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் தேநீர்க் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
தேநீர்க் கடையை காலி செய்வது தொடர்பாக கந்தசாமி மற்றும் ஜெகதீஷ் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெகதீஷ் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இரும்பு ராடால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டான். சிசிடிவி காட்சி அடிப்படையில் தாக்குதல் நடத்திய நபரைத்தேடி வருகின்றனர்.
Comments