சென்னையில் தனியே வசித்து வந்த தம்பதி தீக்குளித்து தற்கொலை..

0 4613
சென்னையில் தனியே வசித்து வந்த தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் தனியே வசித்து வந்த தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழைய வண்ணாரப்பேட்டையில் மகபூப் பாஷா என்பவது தனது மனைவி நூர்ஜஹானுடன் வசித்து வந்தார். மேலும், அவர்களது 2 மகன்கள் திருமணமாகி தனியே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை மகபூப் பாஷாவின் வீட்டில் புகை வந்ததை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவரகள், வீட்டில் கணவன், மனைவி உடல் கருகிய நிலையில் இருந்ததையும், அருகில் மண்ணென்ணெய் இருந்ததையும் கண்டறிந்தனர். மேலும், மெகபூப் பாஷாவின் தலையில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments