காரும் இருசக்கர வாகனமும் மோதி உருண்டோடும் அம்பாசிடர் கார் - சிசிடிவி பதிவு

0 2384
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இரு சக்கர வாகனமும் அம்பாசிடர் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் இருந்த மூதாட்டி பலியான நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் சினிமா காட்சியில் வருவதை போல பல முறை உருண்டு நொறுங்கும் சிசிடிவில் பதிவான காட்சி வெளியாகியுள்ளது.

கோபிசெட்டிபாளயத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பண்ணாரி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, கோவில் அருகே எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது அதிவேகத்தில் வந்த கார் மோதியதாக கூறப்படுகிறது.

இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறிய கார் சாலையில் உருண்டு நின்றது.

இந்த விபத்தில் காரில் இருந்த 60 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments