காரின் மீது ஏறி நின்ற லாரி.. அப்பளம்போல நொறுங்கிய கார்.. போராடி மீட்கப்பட்ட உடல்கள்..

0 2520
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலங்காடு பகுதியில் கார் மீது லாரி மோதி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலங்காடு பகுதியில் கார் மீது லாரி மோதி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியை சேர்ந்த பதர் நிஷா என்பவர் மலேசியா செல்வதற்காக சென்னைக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அந்த காரை கிருஷ்ணசந்தர் என்பவர் ஓட்டிச்சென்ற நிலையில், சீர்காழி அருகே விதிகளை மீறி தேசிய நெடுஞ்சாலையோரம் அந்த கார் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், அந்த கார் சாலையின் வளைவிற்கு அருகே கவனமின்றி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவ்வழியே வேகமாக வந்த டாரஸ் லாரி ஒன்று கார் நிற்பதை அறியாமல் சாலையில் வளைந்தபோது, காரின் பின்னால் பலமாக மோதியுள்ளது. இதில், அந்த கார் சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு ஒரு வீட்டின் சுவற்றின் மீது மோதி நின்றதாக சொல்லப்படுகிறது.

விபத்தில் அந்த கார் உருக்குலைந்த நிலையில், அதன் ஓட்டுநர் உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments