ஐ.பி.எல் போட்டிக்கான டெல்லி அணியின் உடற்பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி

0 6436
ஐ.பி.எல் போட்டிக்கான டெல்லி அணியின் உடற்பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி

ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் உடற்பயிற்சியாளரான பேட்ரிக் பர்ஹார்டிற்கு (Patrick Farhart) கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அணி வீரர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15ஆவது ஐபிஎல் தொடர் மும்பை மற்றும் புனே நகரங்களில் நடைபெறும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கையாக அணி வீரர்கள் உள்ளிட்டோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், டெல்லி அணி உடற்பயிற்சியாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை அணி வீரர்கள் உள்ளிட்டோர் ஓட்டல் அறையிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments