அமெரிக்க எல்லை அருகே, உக்ரைனிய பெண்மணியை திருமணம் செய்த ரஷ்யர்

0 1350
அமெரிக்க எல்லை அருகே, உக்ரைனிய பெண்மணியை திருமணம் செய்த ரஷ்யர்

அமெரிக்காவில் அடைக்கலம் புகுவதற்காக ரஷ்யர் ஒருவர் தன் உக்ரைன் நாட்டு காதலியை அமெரிக்க எல்லை அருகே உள்ள குடிமக்கள் பதிவு அலுவலகத்தில் வைத்து கரம் பிடித்தார்.

ரஷ்யரான செமன் பிரபவுஸ்கி-யும், உக்ரைன் நாட்டின் டரினா-வும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.  விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடைபெற இருந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால் இருவரும் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவெடுத்தனர்.

அதற்காக மெக்சிகோ வந்த அவர்கள் அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சமடைவதற்காக விண்ணப்பித்தனர். உக்ரைனிய பெண்மணியான டரினா-விற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ரஷ்யரான செமன் பிரபவுஸ்கி-யின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து புலம்பெயர்ந்தோருக்கான சேவை மைய அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி, அவர்கள் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி மணம் செய்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments