ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது.. ஆளில்லாத வீடுகளில் கதவை உடைத்து நகை, பணம் திருடிய கும்பல்

0 837
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது.. ஆளில்லாத வீடுகளில் கதவை உடைத்து நகை, பணம் திருடிய கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே , ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்களை காவல் நிலைய வாசலில் வைத்து போலீசாரிடம் சிக்கினர்.

சமத்துவபுரம் காவல் நிலையம் அருகே ஆளில்லாத வீடுகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. அதே நேரத்தில் வேறு பல வீடுகளிலும் அடுத்தடுத்து திருட்டு சம்பவம் அரங்கேறியது இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்த நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்த நிலையில் காவல் நிலையத்தின் முன்பாக ஆடம்பர பைக்குகளில் சகஜமாக சுற்றி திரிந்த இளைஞர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வர அவர்களை பிடித்து விசாரித்தனர். 

ஆடம்பர ஆடைகள் மற்றும் பைக்குகளுக்கு ஆசைப்பட்டு, நண்பர்களுடன் சேர்ந்து, ஆளில்லாத வீடுகளில் கதவை உடைத்து நகை, பணம் திருடியதாகவும், அந்தப் பணத்தில் கஞ்சா வாங்கி விற்றதுடன், வெளியூர்களுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருவரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments