கனமழையால் மின்சார கம்பிகள் உரசி வீடுகளில் டி.வி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் சேதம்

0 1148
கனமழையால் மின்சார கம்பிகள் உரசி வீடுகளில் டி.வி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் சேதம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் புதுமனை கிராமத்தில், உயர் மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் இருந்த மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன.

கடந்த சில நாட்களாக, அந்த பகுதியில் காற்றுடன் கூடிய கோடை மழை பெய்து வருகிறது. மழை காரணமாக, செட்டிகுளம் புதுமனை கிராமத்தில் செல்லும் மின்சார கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி, உயர் மின் அழுத்தத்தால் மின் தடை ஏற்பட்டது.

அப்போது 45க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. மழை காலங்களில் இது போன்று நிகழ்வதால் நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments