வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனைகள்

0 583
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனைகள்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஏராளமான கிறிஸ்தவ மக்கள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருகின்றனர். மாலையில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இறைவழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

சிறப்பு திருப்பலியில் பங்கேற்க பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தவண்ணம் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments