நடிகை சோனம் கபூர் வீட்டில் நகைகள் களவாடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

நடிகை சோனம் கபூர் வீட்டில் திருடப்பட்ட நகைககளை வாங்கிய நகை வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் வீட்டில் 100 வைரங்கள், ஆறு தங்கச்சங்கிலிகள், வைர வளையல்கள், வைர பிரேஸ்லட், உள்பட சுமார் இரண்டரை கோடி ரூபாய் நகைகள் களவு போயின.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசார் சோனம் வீட்டில் செவிலியராக பணியமர்த்தப்பட்டு இருந்த அபர்ணா ருத் மற்றும் அவர் கணவர் நரேஷ் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் திருடப்பட்ட நகைகளை வாங்கியதாக தேவ் வர்மா என்ற நகை வியாபாரி மூன்றாவதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments