கரூரில் அரசு சுவற்றில் விளம்பரம் எழுதுவது தொடர்பான பிரச்சனை.. திமுக - பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு.!

0 1730

கரூரில் அரசு சுவற்றில் விளம்பரம் எழுதுவது தொடர்பாக திமுக, பாஜகவினரிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வடக்குப் பிரதட்சணம் சாலையில் இயங்கி வரும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக சுவற்றில் பாஜகவினர் தங்களது கட்சி விளம்பரத்தை எழுதி இருந்தனர் என்றும் அதனை அழித்துவிட்டு திமுகவினர் தங்களது விளம்பரத்தை எழுதினர் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபடவே, அங்கு இரு கட்சிகளையும் சேர்ந்த ஆதரவாளர்கள் ஒன்று கூடினர். தகவலறிந்து வந்த போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்து இரு கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

சுமார் 2 மணி நேரம் இருதரப்பும் விலகிச் செல்ல மறுத்ததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இரு கட்சியினரும் கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments