ஆதரவற்ற பள்ளி மாணவர்களின் விருப்பம் நிறைவேற்றம்.. புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் படத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்.!

சென்னை அடுத்த பூந்தமல்லியில் ஆதரவற்ற பள்ளி மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர்கள் தொண்டு நிறுவனம் சார்பில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை காண அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆதரவற்ற மாணவர்கள், முதியவர்கள் என சுமார் 350 பேருக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டதுடன், திரையரங்கு ஒன்றில் பீஸ்ட் படம் காண்பிக்கப்பட்டது.
Comments