விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு.. 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.!

0 2030

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் ஹரிஹரன் என்கிற சரவணன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், 8 பேரில் 4 பள்ளிச் சிறுவர்கள் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஹரிஹரன், பிரவீன், ஜூனத் அகமது, மாடசாமி ஆகியோரது நீதிமன்றக் காவல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரின் அவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments