கேரளாவில் சாலையை கடக்க முயன்றவர் மீது, இரு சக்கர வாகனம் வேகமாக மோதிய சிசிடிவி காட்சி.!

0 2196

கேரளாவில் சாலையை கடக்க முயன்றவர் மீது, இரு சக்கர வாகனம் வேகமாக மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கொண்டோட்டி என்ற இடத்தில் முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, மலப்புரத்தில் இருந்து கோழிக்கோடு நோக்கி வேகமாக சென்ற பைக், அந்த முதியவர் மீது மோதியதில், முதியவர், சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்டார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் பைக்கில் வந்த இருவரும் சாலையில் விழுந்தனர். முதியவர் உட்பட காயமடைந்த 3 பேரையும் பொதுமக்கள் மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments