திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.!

0 2187

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு பேனர் வைக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

விசிக இளைஞரணி பொறுப்பாளராக இருக்கும் சின்னதுரை என்ற அந்த இளைஞர், தனது கட்சியினர் 3 பேருடன் அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு பத்தர் கடை பகுதியில் சுமார் 20 அடி நீளமுள்ள பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, உயரழுத்த மின்கம்பியின் பேனர் உரசியதாக கூறப்படும் நிலையில், பேனரை பிடித்திருந்த 4 பேரும் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டனர். இதில், சின்னதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சின்னதுரையின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments