சென்னையில் பீஸ்ட் டிக்கெட்டை பிளாக்கில் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது.!
பீஸ்ட் டிக்கெட்டை பிளாக்கில் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் பீஸ்ட் படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார், 134 டிக்கெட்டுகளுடன் தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்தனர்.
அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, விஜய் மக்கள் இயக்கத்தின் விருகை பகுதி தலைவர் வேல்முருகன் என்பதும் ரசிகர்களுக்காக கொடுக்கப்பட்ட 180 டிக்கெட்டுகளில் 46 டிக்கெட்டுகளை மட்டும் ரசிகர்களுக்கு கொடுத்து விட்டு மீதமுள்ள டிக்கெட்டுகளை 300 ரூபாய்க்கு பிளாக்கில் விற்றதும் தெரியவந்தது.
Comments