நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.. வாழ்த்து கூறும் போது ரசிகர் கொடுத்த தாமரைப்பூவை பெற்றுக் கொண்டார்

0 2482
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.. வாழ்த்து கூறும் போது ரசிகர் கொடுத்த தாமரைப்பூவை பெற்றுக் கொண்டார்

தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி தனது வீட்டுக்கு முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ் புத்தாண்டு தினத்திற்கு வாழ்த்து சொல்வதற்காக நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு முன் ரசிகர்கள் காலையில் இருந்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், திடீரென வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த், கையைசைத்து  ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அப்போது ரசிகர் ஒருவர் தாமரை பூவை கொடுக்கவே, அதனை வாங்கிக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தாமரை பூவை கையில் வைத்திருந்தவாறு கையை அசைத்து வாழ்த்து கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments