தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு புத்தாண்டு வெற்றி, சந்தோஷத்தை தரும் - பிரதமர் மோடி

0 2967
தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு புத்தாண்டு வெற்றி, சந்தோஷத்தை தரும் - பிரதமர் மோடி

தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி, உலகெங்கும் வாழும் தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, தமது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இந்த புத்தாண்டு வெற்றியையும், சந்தோஷத்தையும் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அனைவரது லட்சியங்களும் நிறைவேறட்டும் எனக் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். இதேபோன்று மகாவீர் ஜெயந்திக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments