டீச்சருக்கு டாட்டா காட்டிய காதலன்... கெட்டி மேளம் கொட்டிய போலீஸ்..! கிளைமேக்ஸில் காதலுக்கு மரியாதை

0 4728

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, 5 வருடம் காதலித்த ஆசிரியையைக் கைவிட்டு, கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர், போலீசாரின் கைது நடவடிக்கைக்குப் பயந்து ஆசிரியையைத்  திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சித்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகவல்லி. ஆசிரியை பட்டப்படிப்பு முடித்து பயிற்சி ஆசிரியையாக உள்ள இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது பட்டதாரி இளைஞரான ஆனந்தராஜ் என்பவரும் கடந்த 5 வருடங்களாக கல்லூரி காலம் தொட்டே காதலித்து வந்ததாகக் கூறப்படுகின்றது.

நாகவல்லியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகிய ஆனந்தராஜ் அத்துமீறியதாகக் கூறப்படுகின்றது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள் என்பது போல, தனது இச்சை தீர்ந்ததும் ஆசிரியை நாகவள்ளியிடம் இருந்து விலகத் தொடங்கி உள்ளார் ஆனந்தராஜ்.

நாகவல்லி பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டுக் கொண்ட நிலையில், நாகவல்லியிடம் பேச்சுவார்த்தையை துண்டித்துக் கொண்ட ஆனந்தராஜ், தனது அக்காள் மகளை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் குடியேற திட்டமிட்டுள்ளார். இந்ததகவல் அறிந்து ஏமாற்றத்துக்குள்ளான நாகவல்லி ஆனந்தராஜை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மன்றாடி உள்ளார் . அப்போதும் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்து, காதல் விவகாரம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி சென்றுள்ளார்

இதனால் அதிர்ச்சி அடைந்த நாகவல்லி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார்அளித்தார். இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தியதில் ஆனந்தராஜ் நாகவல்லியை காதலித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து ஆனந்தராஜ் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து பேசிய போலீசார், நாகவல்லியை திருமணம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினர். இல்லையென்றால் ஆனந்தராஜ் மீது 376 ஆவது சட்டப்பிரிவில் வழக்குபதிவு செய்யப்படும் , 7 வருடம் முதல்10 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் எச்சரித்தனர். இதையடுத்து பயந்து போன ஆனந்தராஜ் , நாகவல்லியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். இதையடுத்து மகளிர்காவல்நிலையம் எதிரே எம்ஜிஆர்நகரில் அமைந்துள்ள வண்ணமுத்துமாரியம்மன் கோயிலில் இருவரின் பெற்றோர்கள், போலீசார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஆனந்தராஜ், நாகவல்லியின் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

ஐந்து வருடங்களாகக் காதலித்து விட்டு காதலியை கழற்றிவிட நினைத்த இளைஞர், காவல்துறையினரின் எச்சரிக்கைக்கு பயந்து காதலிக்கு தாலிகட்டி காதலுக்கு மரியாதை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments