அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை.. ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை.. ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சார்பில் 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து போக்குவரத்துதுறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளில் ஏறி தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஒரு நிரந்தர தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என கூறினார்.
Comments