டாஸ்மாக் கடை ஊழியர்களை வழிமறித்து கத்தி காட்டி மிரட்டி பணம் பறிப்பு.. ரூ. 3.24 லட்சம் பறித்து தப்பிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை

டாஸ்மாக் கடை ஊழியர்களை வழிமறித்து கத்தி காட்டி மிரட்டி பணம் பறிப்பு.. ரூ. 3.24 லட்சம் பறித்து தப்பிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை
திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடை ஊழியர்களை வழிமறித்து, 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயை பறித்து தப்பிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்யாறு அடுத்த பில்லாந்தி பகுதியில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடையின் விற்பனையாளரும், மேற்பார்வையாளரும் நேற்றிரவு கடை மூடிவிட்டு, விற்பனை தொகையை எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வெம்பாக்கம் - பாப்பாந்தாங்கல் சாலை வழியாக செய்யாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
சுமங்கலி கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதாகவும், முகத்தில் மிளகாய் பொடி தூவி பணம் பறித்து தப்பிச் சென்றதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
Comments