ஐரோப்பியாவின் மிகப் பெரிய கஞ்சாத் தோட்டம் அழிப்பு.. ரூ.822 கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு

0 2677
ஐரோப்பியாவின் மிகப் பெரிய கஞ்சாத் தோட்டம் அழிப்பு.. ரூ.822 கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு

ஐரோப்பியாவின் மிகப் பெரிய கஞ்சாத் தோட்டத்தை கைப்பற்றியதாக தெரிவித்த ஸ்பெயின் போலீசார் தோட்டத்தின் ட்ரோன் காட்சிகளை வெளியிட்டுள்ளனர். 

இந்திய மதிப்பில் 822 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகளை அழித்ததாக ஸ்பெயின் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 50 டன் கஞ்சாவை பறிமுதல் செய்ததாகவும், நாவரே பகுதியில் சட்டவிரோத கும்பல் இவ்வளவு பெரிய கஞ்சா தோட்டத்தை உருவாக்கியது பேரதிச்சியை ஏற்படுத்துவதாகவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments