பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் ஜப்பான் பேரிடர் குழுவினர் ஆய்வு.. பேரிடர் காலங்களில் வெள்ள பாதிப்புகளை தடுப்பது குறித்து ஆலோசனை

0 1704
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் ஜப்பான் பேரிடர் குழுவினர் ஆய்வு.. பேரிடர் காலங்களில் வெள்ள பாதிப்புகளை தடுப்பது குறித்து ஆலோசனை

திருவள்ளூர் அடுத்த பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பேரிடர் மேலாண்மை குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

திருவள்ளூரின் முக்கிய சுற்றுலாத் தளமாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்.

திருவள்ளூர் வந்த ஜப்பான் பேரிடர் மேலாண்மை குழுவினர் 13 பேர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, ஆந்திரா அம்மாபள்ளி அணைக்கட்டு உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பேரிடர் காலங்களில் வெள்ள பாதிப்புகளை தடுப்பது, நீர்நிலைகளை பாதுகாப்பது, கொசஸ்தலை ஆற்றில் ஏற்படும் மழை வெள்ளங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பது உள்ளிடவற்றை குறித்து மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments