கடைகளில் தனியாக இருக்கும் பெண்களை தேடித் தேடி சங்கிலி பறிப்பு.. 9 பெண்களிடம் கைவரிசை காட்டிய டிப்-டாப் கொள்ளையன் கைது

0 3277
கடைகளில் தனியாக இருக்கும் பெண்களை தேடித் தேடி சங்கிலி பறிப்பு.. 9 பெண்களிடம் கைவரிசை காட்டிய டிப்-டாப் கொள்ளையன் கைது

கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதி கடைகளில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த டிப்-டாப் கொள்ளையனை சிசிடிவி மூலம் போலீசார் கைது செய்தனர்.

சங்கிலி பறிப்பு சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை ஒருவன் ஓட்டி வருவதை கண்ட போலீசார் அவனை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் பிடிபட்டவன் ஆன்றோ சுபின் என்றும், ஆக்குவரியம் தொழில் செய்து வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும் அரசுக்கு வேலை பெற கடன் வாங்கி ஏமாந்ததாகவும் அதற்கு வட்டி செலுத்தவும், மறைமுக தோழியுடன் சொகுசு வாழ்க்கை வாழவும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக ஆன்றோ சுபின் விசாரணையில் தெரிவித்துள்ளான்.

30 சவரன் தங்க நகை, சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், ஆன்றோ சுபினை சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments