மனித உரிமைகள் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கின் கூறிய கருத்துக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

0 1710
மனித உரிமைகள் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கின் கூறிய கருத்துக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

இந்தியாவில் மனித உரிமைகள் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கின் கூறிய கருத்துக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த ஜெய்சங்கர் இந்தியாவில் மனித உரிமைகள் பற்றிய விவகாரம் ஏதும் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம் பெறவில்லை என்று கூறினார்.

சர்வதேச அரசியல் விவகாரங்கள், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள்தான் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இடம் பெற்றதாகக் கூறினார். இந்தியா வந்த பிளிங்கென் இந்தியாவில் மனித உரிமைகள் பற்றி குறிப்பிட்டதாகவும் அதற்கு அப்போதே உரிய வகையில் பதிலளித்துவிட்டதாகவும் ஜெய்சங்கர் நினைவு கூர்ந்தார்.

அமெரிக்காவிலும் மனித உரிமைகள் பிரச்சினை எழுவதை இந்தியா சுட்டிக் காட்டுவதாக ஜெய்சங்கர் கூறினார். புருக்ளினில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சீக்கியர்கள் சுடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments