பாதாள சாக்கடையின் கான்கிரீட் உடைந்து திடீர் பள்ளம்.. இரு சக்கர வாகனத்துடன் 5 பேர் பள்ளத்தில் விழுந்தனர்

0 2081
பாதாள சாக்கடையின் கான்கிரீட் உடைந்து திடீர் பள்ளம்.. இரு சக்கர வாகனத்துடன் 5 பேர் பள்ளத்தில் விழுந்தனர்

ராஜஸ்தானில் பாதாள சாக்கடையின் கான்கிரீட் உடைந்து உருவான திடீர் பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் தலைகுப்புற விழுந்த 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஜெய்சல்மர் நகரில் பஞ்சர் கடையின் முன் 4 பேர் கதையடித்துக் கொண்டு இருந்த நிலையில் அவர்களுக்கு அருகில் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பழுதை நீக்கிக் கொண்டிருந்தார்.

அப்பகுதியில் திடீரென பாதாள சாக்கடையின் கான்கிரீட் சேதமடைந்து பள்ளம் உருவானதால், இரு சக்கர வாகனத்துடன் 5 பேரும் உள்ளே விழுந்தனர்.

லேசான காயங்களுடன் அவர்கள் தப்பிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments