ராம சமாஜ அமைப்பு குறித்து கடிதம் எழுதியதால் கொலை மிரட்டல்.. அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர் ரமணி போலீசில் புகார்

0 1907
ராம சமாஜ அமைப்பு குறித்து கடிதம் எழுதியதால் கொலை மிரட்டல்.. அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர் ரமணி போலீசில் புகார்

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து நடத்த வேண்டுமென கடிதம் எழுதியதற்கு, ராம சமாஜம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அச்சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் ரமணி போலீசில் புகாரளித்துள்ளார்.

இதுகுறித்து ரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2004 ஆம் ஆண்டு அயோத்யா மண்டபத்தில் ஆஞ்சநேயர் சிலை வைத்து பூஜை நடத்தப்பட்டு காணிக்கை வசூலிக்கப்பட்டதாகவும், சங்கங்களுக்கான விதிமுறைகளை ராம சமாஜம் அமைப்பு மீறியதாகவும், அறக்கட்டளையில் 13 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதால் அறநிலையத் துறைக்கு கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ராம சமாஜம் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட 3 பேர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments