முதல் பாதி பீஸ்ட் 2 வது பாதி RRR.. திரையரங்கில் டுவிஸ்ட்.. என்ன தான் படம் ஸ்லோன்னாலும் இப்படியா.?

0 4946

பீஸ்ட் படம் வெளியான திரையரங்கு ஒன்றில் முதல் பாதி பீஸ்ட் படம் திரையிடப்பட்ட நிலையில் இடைவேளைக்கு பின்னர் டிரிபில் ஆர் படம் திரையிடப்பட்ட கூத்து அரங்கேறி உள்ளது. பீஸ்ட்க்கு  ரசிகர்கள் முன்வைக்கும்  விமர்சனங்களின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் மதுரை திரையரங்கு ஒன்றில் முதல் பாதி பீஸ்ட் படம் திரையிடப்பட்ட நிலையில் இரண்டாவது பாதிக்கு எஸ்.எஸ்.ராஜமவுலியின் டிரிபிள் ஆர் படத்தை திரையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திரையில் ராம் சரன் கம்பீரமாக நடந்து வர, பீஸ்ட்டுக்கு பதில் ஆர்.ஆர்.ஆர் திரையிடப்படுவதாக ரசிகர்கள் கோஷமிட, ஆபரேட்டர் அறையை நோக்கி செல்போன் டார்ச் லைட்டை அடித்து கூச்சலிட்டனர்

சிறிது நேரத்தில் தவறுதலாக ஒளிப்பரப்பான ஆர். ஆர்.ஆர் படத்தை நிறுத்தி விட்டு பீஸ்ட் மோடுக்கு பதிலாக விளம்பர மோடுக்கு சென்றது திரையரங்கு.

திரையரங்கில் ரசிகர்களால் எடுக்கப்பட்ட இந்த காட்சியை வைரலாக்கும் ரசிகர்கள் பீஸ்ட் படம் கொஞ்சம் ஸ்லோதான் அதுக்காக ஆபரேட்டரே ஸ்பீடா இருக்கட்டும்னனு ஆர். ஆர் . ஆர் படத்தை எடுத்து போட்டுட்டார் போல... என கமெண்டுகளால் கலாய்த்து வருகின்றனர்.

மற்றொரு திரையரங்கில் திரைத்தீப்பிடிக்கும் என்ற பீஸ்ட் பாடல் வரிகளுக்கு ஏற்ப உண்மையிலேயே திரையில் தீப்பிடித்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது

அண்ணாத்த, வலிமை படங்களை போல முதல் நாளிலேயே பீஸ்ட் படத்திற்கு வரும் எதிர்மறையான விமர்சனங்களால் விஜய் ரசிகர்களை விட நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அடுத்த படத்திற்கு காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments