பேருந்து நிலையத்தில் குடிநீர் பாட்டில் வாங்கிய நபருக்கு அதிர்ச்சி.. பிஸ்லரி குடிநீர் பாட்டிலில் இறந்து மிதந்து கிடந்த கொசுக்கள்.!

0 3342

தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் வாங்கிய, பிஸ்லரி நிறுவனத்தின் குடிநீர் பாட்டிலில் கொசுக்கள் இறந்து மிதந்ததாக புகார் எழுந்துள்ளது.

தருமபுரியை சேர்ந்த செந்தில்ராஜா என்பவர், தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்த கடை ஒன்றில் பிஸ்லரி குடிநீர் பாட்டிலை வாங்கியதாக கூறப்படுகிறது.

அதில் இறந்த நிலையில் கொசு இருப்பதை பார்த்து அதிர்சியடைந்த அவர், கடைக்காரரிடம் கேட்டபோது தாங்கள் விற்பனை மட்டுமே செய்வதாகவும் இதுகுறித்து ஏதும் தெரியாது எனவும் கூறியதாக சொல்லப்படுகிறது.

தரமற்ற குடிநீர் பாட்டில் விநியோகம் தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவுள்ளதாக செந்தில்ராஜா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments