4 நாட்கள் தொடர் விடுமுறை - ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு.!

0 2431

தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக பயணிகள் புகார் கூறியுள்ளனர்.

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, வார இறுதி நாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன் காரணமாக இன்றும் நாளையும் சென்னையில் இருந்து கூடுதலாக 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பிற பகுதியில் இருந்து சென்னைக்கு 17ஆம் தேதி முதல் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துதுறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளதாக அவற்றில் பயணம் செய்தோர் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments