கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் தங்கும் விடுதி கட்டடத்தில் மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரியும் வீடியோ.!
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் தங்கும் விடுதி கட்டடத்தின் அருகே மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரியும் வீடியோவை விடுதி மாணவிகள் வெளியிட்டுள்ளனர்.
மாணவிகள் விடுதி அருகே அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி நடமாடுவதாகவும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ளது. மர்ம நபர் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த நபரை தேடி வருகின்றனர்.
Comments